என் மலர்

  செய்திகள்

  கழிவுநீர்
  X
  கழிவுநீர்

  பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் குடியிருப்பை சுற்றி ஓடும் கழிவுநீர்- பொதுமக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாரிகுளம் சுடுகாடு அருகே பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் குடியிருப்பை சுற்றி ஓடும் கழிவுநீரால் அவதியடைந்துள்ள பொதுமக்கள் நோய் பரவும் அபாயத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.
  தஞ்சாவூர்:

  தஞ்சையில் உள்ள 51 வார்டுகளிலும் கழிவுநீரை சேகரிப்பதற்காக மாரிக்குளம், பள்ளியக்ரஹரம், கரந்தை, வடக்குவாசல் ஆகிய இடங்களில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த நீர் பாசனத்துக்கு விடப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாரிகுளம் சுடுகாடு அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாக செல்கிறது. இதன் காரணமாக அண்ணாநகர், ஜெகநாதன் நகர், அன்பு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குடியிருப்பை சுற்றி கழிவு நீர் தேங்கியும், பல இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்தும் ஓடியவாறு உள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

  நோய்பரவும் அபாயத்தால் அச்சம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக மாரிக்குளம் சுடுகாட்டில் இருந்து சமுத்திரம் ஏரிக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படும் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×