என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கோவையில் 24 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
  கோவை:

  கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 14 நாட்களுக்கு பின் அவர்களுக்கு இரு முறை ரத்தம், சளி மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்படுகிறது. 2 பரிசோதனையிலும் கொரோனா இல்லை என முடிவு வந்தால் மட்டுமே அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

  இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவையை சேர்ந்த 5 பேர், திருப்பூர், நீலகிரியை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இதுவரை 88 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர். தற்போது கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கோவையை சேர்ந்த 46 பேர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 14 ஆண்கள், 10 பெண்கள் ஆவர். இவர்களில் 7 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 17 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×