search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏலக்காய் தோட்டம்
    X
    ஏலக்காய் தோட்டம்

    ஏலக்காய் தோட்டங்களை வீட்டில் இருந்தபடி சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கும் விவசாயிகள்

    மலைப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களை வீட்டில் இருந்தபடி சிசிடிவி கேமரா மூலம் விவசாயிகள் கண்காணித்து வருகின்றனர்.
    கம்பம்:

    தேனி மாவட்ட மலைப்பகுதி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், தேவாரம், போடி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே 60 சதவீதத்திற்கும் மேலான ஏலத்தோட்டங்கள் உள்ளன. தேனி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த 15 லட்சம் பேர் ஏலக்காய் விவசாயம், வியாபாரத்தை நம்பியுள்ளனர்.

    ஏல தோட்ட உரிமையாளர்கள் அங்கு சென்று செடிகளுக்கு தண்னீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். தற்போது போக்குவரத்து முடங்கி உள்ளதால் ஏலச்செடிகளை பராமரிக்க முடியாமல் அவை கருகும் நிலை உள்ளது.

    கொரோனா ஊரடங்கால் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து விவசாய சங்க கோரிக்கையை ஏற்று ஏலத்தோட்டங்களில் தண்ணீர், மருந்து தெளிப்பு, பழம் எடுத்தல் போன்ற பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. அங்குள்ள தொழிலாளர்களை பயன்படுத்தி பணிகள் ஆரம்பமானது.

    இந்த பணிகளை கண்காணிக்க விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்கள் வீட்டில் இருந்தபடி தோட்டத்தை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

    ஏற்கெனவே பல விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். தற்போது நடைபெறும் பணிகளை அவற்றின் உதவியுடன் மேற்பார்வை செய்ய துவங்கியுள்ளனர். கம்பம் புதுப்பட்டியை ஏல விவசாயி அருண்பிரசாத். ஊரில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் புத்தடி அருகில் வால்மேடு என்ற இடத்தில் இவர் தோட்டம் உள்ளது. இவர் தனது தோட்டத்தில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி செல்போனுடன் இணைத்துள்ளார்.

    தற்போது தோட்டத்துக்கு போக முடியாத சூழலில் இந்த கேமராக்கள் பயனுள்ளதாக உள்ளது. தோட்டத்தில் நடைபெறும் பணிகளை கேமராக்கள் வழியாக வீட்டில் இருந்தபடியே இணைப்பு தந்து செல்போனில் பார்க்கிறார். ‘டிவி’ யிலும் இணைத்துள்ளார். ஊரடங்கு முடியும் வரை இந்த முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளார். இதே நடைமுறையை பலரும் கடைபிடிக்கிறார்கள்.

    Next Story
    ×