என் மலர்

  செய்திகள்

  வாழை மரக்கன்றுகள்
  X
  வாழை மரக்கன்றுகள்

  ஊரடங்கு கட்டுப்பாட்டால் வாழை நடவு செய்ய வழியின்றி தவிக்கும் விவசாயிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊரடங்கு கட்டுப்பாட்டால் வாழை நடவு செய்ய வழியின்றி தவித்து வரும் விவசாயிகள் வாழை மரக்கன்றுகள், உரங்கள் நேரடியாக வினியோகம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
  கொடைக்கானல்:

  கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் சாமக்காட்டு பள்ளம், பாலமலை போன்ற பகுதிகளில் வாழை, காபி, ஆரஞ்சு போன்றவை அதிகமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வாழை நடவு பணிக்கு ஏற்ற மாதமாக சித்திரை மாதம் உள்ளதால் அடுக்கம் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குழிகள் எடுத்து தயாராக வைத்துள்ளனர்.

  இதனிடையே கொரோனா ஊரடங்கால் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் டிரைவர் அவர் உதவிக்கு ஒருவர் என 2 நபர்கள் மட்டும் பயணிக்க உத்தரவிட்டுள்ளது. வாழை கன்றுகள் எடுத்துவருவதற்கும், உரங்கள் எடுத்து வருவதற்கும் 5க்கும் மேற்பட்டோர் தேவைப்படும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் குழிகள் எடுத்துவைத்து காத்திருக்கின்றனர்.

  எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இப்பகுதி மக்களுக்கு வாழை மரக்கன்றுகள், உரங்கள் நேரடியாக வினியோகம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வாழை மரங்கள் விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைத்தும், வங்கி கடன்கள் பெற்றும் இந்த பணிகள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×