என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருவோணம் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேர் மீது வழக்கு- ஒருவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் அருகே சாராயம் காய்ச்சி விற்றது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  திருவோணம்:

  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை தட்டான்கொள்ளை பகுதியில் திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக திருவோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய அடைக்கல டேவிட் மற்றும் தலைமை காவலர் சரவணன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பிரபாகரன் (வயது 29), நந்தகுமார் (45), வெற்றிச்செல்வன் (36)ஆகி3 பேர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை கைது செய்ததுடன் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

  மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நந்தகுமார், வெற்றிச்செல்வன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×