என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- ஆட்டோ டிரைவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அடி அண்ணாமலை பழைய காலனியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் ஜான்பிரபு (வயது25) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று திருவண்ணாமலை கொட்டாங்கல் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜான் பிரபு ஒரு பெண்ணை கடந்த 6 மாதமாக காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.

  இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×