என் மலர்

  செய்திகள்

  அம்மா உணவகம்
  X
  அம்மா உணவகம்

  அம்மா உணவகங்களில், முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு- அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை வடக்கு மாவட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்கப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்துள்ளார்.
  கபிஸ்தலம்:

  அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான துரைக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மே மாதத்துக்கு உண்டான அனைத்து ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதற்கான டோக்கன்களை வீடுதோறும் வழங்குவதற்கான தேதியையும் அறிவித்து உள்ளார்.

  தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வார காலமாக விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) முதல் அம்மா உணவகங்களில் முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள வருகிற 3-ந் தேதி வரை தொடர்ந்து பொதுமக்களுக்கு விலையில்லாமல் காலை, மாலை, இரவு என 3 வேளைகளும் முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்படும். இதை ஏழை, எளிய தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×