என் மலர்

  செய்திகள்

  மதுபாட்டில்கள் பறிமுதல்
  X
  மதுபாட்டில்கள் பறிமுதல்

  குமாரபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கிய 750 மதுபாட்டில்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமாரபாளையத்தில் விற்பனைக்காக பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 750 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
  குமாரபாளையம்:

  குமாரபாளையத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆனங்கூர் பிரிவு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

  போலீசார் வருவதை அறிந்த கட்டிடத்தில் இருந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 20 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  Next Story
  ×