என் மலர்

  செய்திகள்

  சரக்கு ரெயில்
  X
  சரக்கு ரெயில்

  நாகர்கோவில்-சென்னை இடையே சிறப்பு சரக்கு ரெயில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்கள் போக்குவரத்திற்காக நாகர்கோவில்- சென்னை இடையே சிறப்பு பார்சல் கார்கோ ரெயில் இயக்கப்படுகிறது.

  மதுரை:

  நாகர்கோவில், சென்னை இடையே சிறப்பு சரக்கு ரெயில் இயக்கப்படுகிறது.மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்கள் போக்குவரத்திற்காக நாகர்கோவில்- சென்னை இடையே சிறப்பு பார்சல் கார்கோ ரெயில் (வண்டி எண் 00658) இன்று (22-ந் தேதி) முதல் இயக்கப்படுகிறது.

  இது நாகர்கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 7.30 மணிக்கு வந்தது.

  அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் (10 மணி), மதுரை (11 மணி), திண்டுக்கல் (12.10 மணி), திருச்சி (மதியம் 2 மணி), தஞ்சாவூர் (2.55 மணி) கும்பகோணம் (மாலை 3.55), மயிலாடுதுறை (4.40 மணி), கடலூர் துறைமுகம் (6.20 மணி), விழுப்புரம் (இரவு 07.30 மணி) வழியாக இரவு 10.30 மணிக்கு சென்னை செல்லும்.

  இதேபோல சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட சரக்கு ரெயில் (வண்டி எண் 00657), மேற்கண்ட ரெயில் நிலையங்கள் வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும். இந்த சரக்கு ரெயில்கள் மே மாதம் 3ம் தேதி வரை இயக்கப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


  Next Story
  ×