என் மலர்

  செய்திகள்

  முக ஸ்டாலின்
  X
  முக ஸ்டாலின்

  அம்மா உணவகத்தில் அரசியல் வேண்டாம்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
  சென்னை:

  திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும். அம்மா உணவகங்களை அதிமுகவினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதுபோல் தாரை வார்ப்பது சரியல்ல. ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா உணவகங்களை அதிமுகவினரின் கைகளில் தந்தது மோசமான அரசியல். தூய்மைப்பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.  

  சுங்கச்சாவடிகளை திறந்து சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மனிதநேயமற்ற செயல். சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனே நிறுத்தி வைக்க வேண்டும். 

  பத்திரிகையாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் கொரோன சோதனை செய்ய வேண்டும். செய்திகளை ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம்  அனுப்புவது மிகமுக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர் பலருக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது. அரசு உள்ளிட்ட அனைவருமே ஊரடங்கு முடியும் வரை பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும். ரேஷனில் அரிசி கார்டு வைத்துள்ளவர்களுக்கு மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×