என் மலர்

  செய்திகள்

  கொரோனா பரிசோதனை
  X
  கொரோனா பரிசோதனை

  திண்டுக்கல் டி.எஸ்.பி. உள்பட 18 போலீசாருக்கு ரத்த பரிசோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டி.எஸ்.பி. உள்ளிட்ட 18 பேருக்கும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல்லில் கொரோனா வைரசால் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்த நிலையில் பலர் குணமடைந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் 35 பேர் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே கடந்த வாரம் திண்டுக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் தங்கியிருந்தனர்.

  சுற்றுலா விசாவில் வந்து, தடை உத்தரவை மீறி மதப்பிரசாரம் செய்தது, சமூக விலகலை கடைப்பிடிக்காதது என வழக்குப் பதிவுசெய்து 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.

  இதை தொடர்ந்து 11 பேரும் கடந்த 17-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கான பாதுகாப்பு பணியில் போலீஸ் டி.எஸ்.பி., சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 16 ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டனர்.

  இதனிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டி.எஸ்.பி. உள்ளிட்ட 18 பேருக்கும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 14 போலீசாரை ஒரு இடத்திலும், 4 பேரை மற்றொரு இடத்திலும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

  Next Story
  ×