search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள் நடமாட்டம்
    X
    யானைகள் நடமாட்டம்

    தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானைகள்- தொழிலாளர்கள் அச்சம்

    தேயிலை தோட்டங்களில் யானைகள் சுற்றி திரிவதால் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இப்பகுதியில் 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான் என பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன.

    வனப்பகுதியில் மழை இல்லாத நிலையில் தண்ணீருக்காக விலங்குகள் அவ்வப்போது தோட்டப்பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்ததால் வன விலங்குகள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன.

    தேயிலைத் தோட்டங்களுக்கு இடம் பெயர்ந்த ஒரு யானை எஸ்டேட் குடியிருப்புகளுக்கு அருகே உலா வந்தது. அங்குள்ள குடிநீர் தேக்கத்தில் இறங்கி தண்ணீர் அருந்திய பின் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீரிலேயே விளையாடிக் கொண்டிருந்தது என மலைக் கிராமத்தினர் தெரிவித்தனர்.

    வன விலங்குகள் நடமாட்டத்தால் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் குறைந்த அளவிலான தொழிலாளர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, வறட்சி காலங்களில் வனப்பகுதியில் விலங்குகளுக்காக அமைக்கப்படும் நீர்த் தொட்டிகளை பராமரிப்பு செய்து தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×