என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விபத்தில் பெண் பலி - சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய மினி லாரி போலீசார் தேடுதல் வேட்டை
தக்கலை:
கருங்கல் அருகே பூட்டோற்றி பகுதியைச் சேர்ந்தவர் ராபி (வயது 40). இவர், தோட்டியோடு அருகே ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று காலையில் ராபி அவரது மனைவி அமலாவுடன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு வந்து கொண்டிருந்தனர். திக்கணங்கோடு கெல்லாயி பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று ராபியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
விபத்தில் சிக்கிய அமலா சம்பவ இடத்திலேயே பலியானார். ராபி படுகாயத்துடன் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் விபத்து குறித்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு காமிராவில் ராபியின் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி ஒன்று மோதி விட்டு நிற்காமல் செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி ராபி மீது மோதி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த மினி லாரியை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.