search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது- தமிழக அரசு

    ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கல்விக்கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
    சென்னை:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. வருமானம் இல்லாமல் பலரும் திண்டாடிவரும் நிலையில் சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டில் நிலுவையில் உள்ள கல்வி மற்றும் இதர கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அரசுக்கு புகார்கள் சென்ற நிலையில் தமிழக அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஊரடங்கு காலத்தில் கல்வி மற்றும் பிற கட்டணங்களை செல்லுத்தக்கோரி மாணவர்களையோ, பொற்றோரையோ நிர்ப்பந்திக்கக் கூடாது என தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×