search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சோதனை சாவடியில் பணியாற்றிய பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா பாதிப்பு

    அன்னூர்-அவினாசி ரோடு கஞ்சப்பள்ளி சோதனைச்சாவடியில் பணிபுரிந்த பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததையடுத்து அவரது சளி, ரத்தம் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
    அன்னூர்:

    கோவை மாவட்டத்தில் இதுவரை 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவையை அடுத்த அன்னூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் அன்னூர்-அவினாசி ரோடு கஞ்சப்பள்ளி சோதனைச்சாவடியில் பணிபுரிந்த 39 வயது பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரது சளி, ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அன்னூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் சோதனை சாவடியில் பெண் போலீஸ் ஏட்டுவுடன் பணிபுரிந்தவர்களுக்கும் இன்று ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான மதுக்கரை, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் அடுத்தடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து கோவை ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ரெயில்வே போலீசாருக்கும் இன்று பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    கோவை இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று ஒரே நாளில் 21 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 108 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    Next Story
    ×