search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை - 2 வடமாநில வாலிபர்கள் கைது

    சூலூரில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சோமனூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சோமனூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பதுக்கி விற்கப்படுவது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் சேர்ந்த குப்பராவ் (32), சிக்கல்ராவ் (24) என்பதும், தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
    Next Story
    ×