என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே பனைமரங்களை சாய்த்து ஒற்றையானை அட்டகாசம்
Byமாலை மலர்21 April 2020 7:01 AM GMT (Updated: 21 April 2020 7:01 AM GMT)
களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடி வாரபகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒற்றையானை முகாமிட்டு, அட்டகாசம் செய்து வருகிறது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குதொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு சிறுத்தை, புலி, கரடி, யானை, கடமான், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, இங்கிருந்து வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார பகுதியில் புகுவது வழக்கம்.
இந்நிலையில் களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடி வாரபகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒற்றையானை முகாமிட்டு, அட்டகாசம் செய்து வருகிறது. பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் யானை, இரவானதும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுவருகிறது.
சிதம்பராபுரம் மலையடி வாரத்தில் உள்ள சத்திரங்காட்டில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. தற்போது பதனீர் சீசன் என்பதால் தொழிலாளர்கள் பனைஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஒற்றை காட்டுயானை தினசரி உணவுக்காக பனை மரங்களை சாய்த்து நாசம் செய்து வருகிறது. இதுவரை 25-க்கும் பனை மரங்களை வேருடன் சாய்த்து அதன் குருத்துகளை தின்று சேதப்படுத்தி உள்ளது.
பனை தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓலை குடிசையையும் யானை துவம்சம் செய்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அப்போது குடிசையில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர் தப்பினர். யானை நடமாட்டத்தால் பகலில் கூட விளைநிலங்களுக்கு செல்ல அச்சமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் அங்குசென்று யானை நாசம் செய்த பனைகளை பார்வையிட்டனர். மேலும் யானையை காட்டுக்குள் விரட்டவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். நாசமான பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
×