search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீல் வைப்பு - கோப்புப்படம்
    X
    சீல் வைப்பு - கோப்புப்படம்

    திருவாரூரில் சமூக இடைவெளியை கடை பிடிக்காத 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

    திருவாரூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 மளிகை கடைகளை தாசில்தார் நக்கீரன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    திருவாரூர்:

    கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் 1075 பேருக்கு பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மளிகை, ஹோட்டல், மீன், இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை பல இடங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க மறுக்கின்றனர். இதனை ஒழுங்குப்படுத்த கடை உரிமையாளர்கள் முயற்சிப்பதில்லை. இதனால் கொரோனா நோய் தொற்று எளிதில் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் பகுதியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகின்றதா என்பது குறித்து உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது புலிவலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் விற்பனை செய்வது தெரியவந்தது. இதேபோல் ஒரு மளிகை கடையிலும் விற்பனை நடைபெற்றது.

    இதனையடுத்து மளிகை, ஹோட்டல் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் திருவாரூர் நகரில் கடைகளை ஆய்வு செய்த போது வண்டிக்கார தெருவில் உள்ள 2 மளிகை கடைடிளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நோய் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 2 மளிகை கடைகளை தாசில்தார் நக்கீரன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    Next Story
    ×