search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய மேலும் ஒருவர் கைது

    ஆண்டிப்பட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆண்டிபட்டி:

    கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவை அடுத்த சிறப்பாறை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடமலைக்குண்டு போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல் போட்டு வைத்திருந்தனர்.

    போலீசாரை கண்டதும் அங்கிருந்த‌ 6 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்கள் சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மொக்கப்பாண்டி, ராம்குமார், மனோஜ், பாண்டி, பாலமுருகன், ஜெயசீலன் ஆகியோர் ஆவர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஊரல் பானைகளை கைப்பற்றினர்.

    இதேபோல் வரு‌ஷநாடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தனியார் தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய காமராஜபுரம் சீனிச்சாமி (74) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய ஜெயமுத்துப்பாண்டி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அங்கிருந்த 100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×