search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்தப்பட்ட வார்டு - கோப்புப்படம்
    X
    தனிமைப்படுத்தப்பட்ட வார்டு - கோப்புப்படம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர் விடுதிகளை வார்டுகளாக மாற்றும் பணி தீவிரம்

    அரசு மாணவர் விடுதிகள் மற்றும் அரசு தனியார் கல்லூரி விடுதிகளில் உள்ள அறைகளை தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் படுக்கை வசதிகளை தயார்படுத்தி வைக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களும் தங்களுடைய சுகாதாரப்பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அரசு மாணவர் விடுதிகள் மற்றும் அரசு தனியார் கல்லூரி விடுதிகளில் உள்ள அறைகளை தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    தற்போது அரசு மருத்துவமனைகளில் 200 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் சுமார் 70 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதிகளில் நோய்தொற்று காணப்படும் நபர்களை தனிமைபடுத்துவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் உருவாக்கும் படுக்கை வசதிகள் பயன்படும்.

    இங்கு படுக்கை வசதியுடன் தேவையான மருத்துவ உபகரணங்களையும் கொண்டுவந்து தயார் நிலையில் வைக்கப்படும். தொற்று ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், தீவிரமாக உள்ளவர்கள், அதிதீவிரமாக உள்ளவர்கள் என வேறுபடுத்தி வெவ்வேறு இடங்களில் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதி தீவிர நோய்கள் உள்ளவர்களை மட்டும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×