search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின் பால் - பொருள்
    X
    ஆவின் பால் - பொருள்

    சென்னையில் முதல் முதலாக சுகி, சுமோட்டா மூலம் ஆவின் பால் - பொருள் விற்க திட்டம்

    சென்னையில் முதல் முதலாக சுகி, சுமோட்டா ஆகிய நிறுவனங்கள் பால் வினியோகம் செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    கொரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கி இருக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    ஆவின் பால் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி வினியோகிக்கப்படுகிறது. பால் அட்டைகள் மூலமும், முகவர்கள் மூலமும் வீடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கிடைக்கிறது.

    சென்னையில் 13 லட்சம் லிட்டர் பால் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் பால் பொருட்கள் பொது மக்களுக்கு மேலும் எளிதாக கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுக்கு வினியோகிக்கும் உரிமையை ஆவின் நிர்வாகம் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

    ஏற்கனவே ‘சூப்பர் டைலி ஆப்’ தனியார் நிறுவனம் மூலம் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மேலும் சுகி, சுமோட்டா ஆகிய நிறுவனங்கள் பால் வினியோகம் செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்காக அந்த நிறுவனங்களிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி ஒருசில நாட்களில் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள 35 ஆவின் பார்லர்கள் மூலம் இந்த நிறுவனங்கள்மூலம் பொது மக்களுக்கு ஆவின் பால் மற்றும் நெய், ஐஸ்கிரீம் வகைகள் குலோப்ஜாம், குளிர்பானங்கள், மைசூர் பாகு, லசி, தயிர், மோர் போன்ற பொருட்கள் இதன் மூலம் வினியோகிக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் சுகி, சுமோட்டா நிறுவனங்கள் மூலம் உணவுக்கு ஆர்டர் கொடுப்பது போல இனி ஆவின் பால் மற்றும் பொருட்களுக்கும் ஆர்டர் கொடுக்கலாம். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்வார்கள்.

    இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சுகி, சுமோட்டா நிறுவனம் மூலம் பால் மற்றும் ஆவின் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தையும் பொது மக்களுக்கு வினியோகிக்க முடிவு செய்து உள்ளோம்.

    ஒருசில நாட்களில் சென்னை மக்களுக்கு இத்திட்டம் மூலம் ஆவின் பொருட்கள் வீடு தேடிவரும்’ என்றார்.
    Next Story
    ×