search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாம்பழம்
    X
    மாம்பழம்

    சேலத்தில் இன்னும் மாம்பழ சீசன் தொடங்காததால் வியாபாரிகள் கவலை

    கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளதால் சேலத்தில் மாம்பழ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சேலம்:

    உலக அளவில் சேலம் மாம்பழத்துக்கு தனி மவுசு உண்டு. மல்கோவா, சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, இமாம்பசந்த், குதாதத், செந்தூரா, நடுச்சாளை போன்ற ரக மாம்பழங்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விளைகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் இறுதி வரை இருக்கும். தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் வரத் தொடங்கி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளதால் மாம்பழ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தோட்டங்களில் விவசாயிகள் மாங்காய்களை பறிக்க ஆட்கள் வராததால் அப்படியே விட்டு விட்டு உள்ளனர். இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு இன்று வரை மாம்பழங்கள் விற்பனைக்கு வரவில்லை. இதனால் மாம்பழ வியாபாரிகள் கவலை அடந்துள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் டன் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் 2 மாதம் தாமதமாகத்தான் மாம்பழ சீசன் தொடங்கும் என்றும், ஆனால் வழக்கம்போல் இல்லாமல் இந்த ஆண்டு 100 டன் அளவுக்குத்தான் மாம்பழங்கள் விற்பனைக்கு வரும் சூழ்நிலை இருப்பதாகவும் மாம்பழ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×