search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த பாரத் சேனா நிர்வாகி கைது

    144 தடை உத்தரவை மீறி வெளியில் வந்ததை தட்டிகேட்ட சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த பாரத் சேனா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள சின்னக் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது 44). இவர் பாரத் சேனா இளைஞர் அணி மாநில அமைப்பாளராக உள்ளார். 

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேரூர் சோதனை சாவடி வழியாக சென்றார். அப்போது அங்கு செல்வபுரம் சப்- இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் அந்த வழியாக வந்த ஜெகதீசை சப்-இன்ஸ் பெக்டர் சின்னத்துரை தடுத்தார். 

    ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் வெளியே வரக்கூடாது என்று கூறி வருகிறோம். நீஙகள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட் டார். அதற்கு அவர் சும்மா தான் வெளியில் வந்தேன். இப்போது அதற்கு என்ன என்று கேட்டு தகராறு செய்ததோடு மட்டும் இல்லாமல் சப்- இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சின்னதுரை சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ஜெகதீஷ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்று நோய் தடுப்பு சட்டம், தடை உத்தரவை மிறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து அவினாசி சப்-ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×