search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    கண்ணனூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவச முக கவசம்

    திருவட்டார் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் மற்றும் சானிட்டரி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
    திருவட்டார்:

    திருவட்டார் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, முக கவசம் மற்றும் சானிட்டரி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்ராஜ், தமிழக காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் டாக்டர் தம்பி விஜயகுமார், மாவட்ட செயலாளர் ஜான் இக்னேசியஸ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜோண் மற்றும் நிர்வாகிகள் ஜெபின், சார்லஸ், சத்தியவேல், டேனியல், ஸ்டான்லி, ஞானசிகாமணி, மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பெனட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×