search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை-ஈரோடு-திருச்சி உள்பட 26 மாவட்டங்களில் நேற்று கொரோனா பரவவில்லை

    கொரோனா பாதிப்புக்குள்ளான 33 மாவட்டங்களில் 26 மாவட்டத்தில் நேற்று கொரோனா பரவல் இல்லை. இதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நெல்லை, ஈரோடு . நாமக்கல், செங்கல்பட்டு, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களும் அடங்கும்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சுகாதார துறையினருடன் இணைந்து போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர் .

    சென்னையில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்கு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவது போலீசாருக்கு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை போலீசார் தினமும் கைது செய்து வருகிறார்கள்.

    இருப்பினும் இது போன்ற தீவிர தடுப்பு நடவடிக்கைகளையும் தாண்டி, ஊரடங்கை மதிக்காமலும் போலீசுக்கு கட்டுப்படாமலும் வெளியில் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதையடுத்து மதியம் 1 மணிக்கு பிறகு கடைகளை அடைத்த பின்னர் வெளியில் சுற்றும் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது போன்ற சூழலில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 690 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதல் இடத்திலேயே உள்ளது. ஏப்ரல் 5-ந்தேதி வரையில் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக இருந்தது. கடந்த 2 நாட்களில் இந்த எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 39 பேரும் நேற்று முன்தினம் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்றைய கொரோனா பாதிப்பை கணக்கெடுத்தால் சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூரில் நேற்று மட்டும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்று 7 மாவட்டங்களில் நேற்றும் கொரோனா பரவி இருந்தது.

    இதன் படி பார்த்தால் கொரோனா பாதிப்புக்குள்ளான 33 மாவட்டங்களில் 26 மாவட்டத்தில் நேற்று கொரோனா பரவல் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. இதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நெல்லை, ஈரோடு . நாமக்கல், செங்கல்பட்டு, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களும் அடங்கும்.
    Next Story
    ×