search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால் துறை
    X
    தபால் துறை

    தேனி மாவட்டத்தில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை தபால்காரர் மூலம் பெறும் வசதி

    தேனி மாவட்டத்தில் தங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தினை உங்கள் வீட்டில் இருந்தபடியே எடுக்க இந்திய தபால் துறை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொது மக்கள் தங்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தினை எடுக்க வெளியே செல்ல முடியாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு தங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தினை உங்கள் வீட்டில் இருந்தபடியே எடுக்க இந்திய தபால் துறை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அளிக்கும் சிறப்பம்சமான ஆதார் எனபல் பேமெண்ட் சிஸ்டம் (ஏ.இ.பி.எஸ்.) மூலமாக தங்களின் ஆதார் இணைக்கப்பட்ட எந்த வங்கி கணக்கில் இருக்கும் பணத்தையும் எடுத்திடவும், இச்சேவையை ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர்ப்புற தபால்முறை மூலமாக வழங்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கிராமபுற மக்களில் அதிலும் குறிப்பாக முதியோர் உதவித்தொகை வாங்குவோர் (ஓ.ஏ.பி.), 100 நாள் வேலைக்கு செல்வோர், சிலிண்டர் மானியம் பெறுவோர், மேலும் மத்திய, மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவி தொகையினை ஆதார் எண் அடிப்படையில் வாங்குவோர் இந்த ஏ.இ.பி.எஸ். மூலம் பயன்பெறலாம். வாடிக்கையாளர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, தேனி கிளை, மற்றும் அருகாமையில் உள்ள முக்கிய தபால் நிலையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்திடலாம் என்று

    தேனி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×