search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி
    X
    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 93 பேர் அனுமதி

    நாமக்கல்லில் இருந்து வந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் அவர்களை கரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்ற சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் தோகைமலையை சேர்ந்த ஒருவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற 22 பேருக்கும் கரூர் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவம னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இடப்பற்றாக் குறை மற்றும் மருத்துவ வசதிக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 43 பேரும், அதன்பின்னர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 4 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

    இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாமக்கல்லில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 24 பேரை கரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்ற சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இன்று மாலைக்குள் அழைத்து வரப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக கரூர் மருத்துவ கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலாவிடம் இன்று கேட்டபோது கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக் கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் யாரும் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. நாமக்கல்லில் இருந்து மேலும் 24 பேரை இங்கு மாற்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    அவர்கள் இன்று வந்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு நேற்று பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதன் ரிசல்ட் இன்று கிடைக்கும். அதன்படி அடுத்த கட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×