search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    சூளைமேட்டில் ஸ்டூடியோ போட்டோகிராபருக்கு கொரோனா - மனைவி - மகள்கள் கண்காணிப்பு

    சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஸ்டூடியோ போட்டோ கிராபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று வரையில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

    அவருடன் தொடர்பில் இருந்த 35 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஸ்டூடியோ போட்டோ கிராபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வட பழனியில் ஸ்டூடியோ வைத்துள்ள அவர் கடந்த 23-ந்தேதியில் இருந்து அதனை மூடி வைத்துள்ளார் . கடந்த 2 -ந் தேதி உடல்நல குறைவால் திருவல்லிக்கேணி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போட்டோகிராபரின் மனைவி, 2 மகள்கள். தாய் ஆகிய 4 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். போட்டோ கிராபர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதோ அல்லது ஸ்டூடியோவுக்கு போட்டோ எடுக்க வந்த நபர், மூலமாகவோ கொரோனா பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×