search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சமூக இடைவெளியை கடைபிடிக்காத 7 காய்கறி கடைகளுக்கு சீல் - மாநகராட்சி நடவடிக்கை

    சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய் கறிகள் விற்பனை செய்த 7 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டுபோட்டு சீல் வைத்தனர்.
    மதுரை:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24-ந் தேதி முதல் தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட 14-வது நாளான இன்று மதுரையில் அத்தியாவசிய பொருட்கள் மளிகை, அரிசி, காய்கறி மற்றும் மருந்து பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன பொதுமக்கள் வழக்கம்போல சமூக இடைவெளியை கடை பிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகள நள்ளிரவு முதல் அதிகாலை வரை திறக்கப்படுகின்றன. வெளி மாவட்டங்களுக்கும் உள்ளூர் பகுதிகளுக்கும் காய்கறி சப்ளை செய்வதற்காக வியாபாரிகள் இங்கிருந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய் கறிகள் விற்பனை செய்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர் அங்குள்ள 7 கடைகள் உடனடியாக பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது மறு அனுமதி கிடைக்கும்வரை கடைகளை திறக்கக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்னர்.

    ஊரடங்கின் 14ஆவது நாளான இன்றும் மதுரையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் சிலர் சாலைகளில் செல்வதைப் பார்க்க முடிந்தது அனைவரும் மாஸ்க் மற்றும் கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி செல்கிறார்கள் முக்கிய பகுதிகளில் போலீசார் தடுப்பு அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகிறார்கள்.

    அடிக்கடி சாலைகளில் செல்லும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்கிறார்கள் மேலும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளான காய்கறி மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடை பிடிக்குமாறு போலீசார் எச்சரித்து வருகிறார்கள். மேலும் ஒலிபெருக்கிகள் மூலம் சாலைகளில் எச்சரிக்கை அறிவிப்புகளையும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவித்து வருகிறார்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×