search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டுக்கோழி முட்டை
    X
    நாட்டுக்கோழி முட்டை

    பொன்னேரியில் நாட்டுக்கோழி முட்டை ரூ.20-க்கு விற்பனை

    கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொன்னேரியில் நாட்டுக்கோழி முட்டை ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பொன்னேரி:

    கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொன்னேரி பகுதியில் இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன.

    பிராய்லர் கோழி, மற்றும் அதன் முட்டைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததாலும், ஆட்டு இறைச்சி தட்டுப்பாட்டாலும் தற்போது நாட்டு கோழிகளை அதிகம் வாங்குகிறார்கள். இதேபோல் நாட்டு கோழி முட்டைகளையும் வீடு, வீடாக சென்று கேட்டு வாங்கி வருகின்றனர்.

    நாட்டு கோழி முட்டை தேவை அதிகரிப்பு காரணமான இது வரை ரூ.10 முதல் 12 வரை விற்ற முட்டைகள் தற்போது ரூ.20 ஆக விற்கப்படுகிறது.

    விலை அதிகம் என்றாலும் பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாட்டுக்கோழி முட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஏராளமானோர் விரும்பி வாங்கி செல்கின்றனர். நாட்டுக்கோழி உயிருடன் ரூ.500 வரை விற்கிறது.

    இதேபோல் இறைச்சி கிடைக்காததல் வாத்துக்களையும் வாங்கி செல்கிறார்கள். ஒரு வாத்து ரூ.100 வரை விற்பனையாகிறது.

    ஊரடங்கு உத்தரவால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர், கானாத்தூர், கோவளம், மாமல்லபுரம், புதுப்பட்டினம், சதுரங்கபட்டினம், கூவத்தூர், மரக்கானம் போன்ற பகுதி களுக்கு போதிய மீன் வரத்து இல்லை.

    மார்க்கட்டுகளுக்கு வந்த மீன் பிரியர்கள் அங்கிருந்த கருவாடுகளை அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் கோழித் தீவனத்துக்கு குறைந்த விலைக்கு கருவாட்டை விற்று வந்த கருவாடு வியாபாரிகள் தற்போது ரூ.100, 200 என கூறுவைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×