search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் ஊரடங்கை மீறியதாக 11 நாட்களில் 1,454 பேர் கைது

    கோவையில் ஊரடங்கை மீறியதாக 11 நாட்களில் 1,454 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 1,609 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பலர் அலட்சியமாக எடுத்து கொண்டு வெளியே சுற்றி திரிந்தனர். வெளியில் வருபவர்களை போலீசார் பல நூதன தண்டனைகள் கொடுத்து எச்சரித்து அனுப்பியும் அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.

    இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 11 நாட்களாக ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றி திரிந்ததாக கோவை மாநகரில் 853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 981 பேர் கைது செய்யப்பட்டனர். 1,184 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை புறநகரில் 419 வழக்குகள் பதிவு செய்யபட்டு 473 பேர் கைது செய்யப்பட்டனர். 425 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக கோவை மாவட்டத்தில் மட்டும் 1,454 பேர் கைது செய்யப்பட்டு 1,609 வாகனங்னள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது போன்ற செயல்கள் தொடர்ந்து தீடித்து வருவதால் கட்டுபாடுகள் அதிகரித்துள்ளது. ஊரடங்கை மீறினால் 2 ஆண்டு சிறை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×