search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திண்டுக்கல்லில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

    திண்டுக்கல்லில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 89 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பினர். அவர்களில் 48 பேரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தார்கள். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் முதல் கட்டமாக 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 31 பேருக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 31 பேரில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 28 பேர், கேரளாவில் இருந்து திரும்பிய 3 பேர் அடங்குவர். இவர்களில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 13 பேர், நத்தம் பகுதியை சேர்ந்த 8 பேர், பழனி பகுதியை சேர்ந்த 5 பேர் என 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

    மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை சந்திப்பதற்கு உறவினர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்க வில்லை. மேலும் பாதிக்கப்பட்ட 43 பேரின் குடும்பத்தினர், உறவினர்களையும் சுகாதாரத்துறையினர் கண்கா ணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இவர்களது வசிப்பிடங்கள், தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

    இப்பகுதியில் இருந்து யாரும்வெளியேறவோ, இப்பகுதிக்கு வெளியாட்கள் வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சுகாதாரத்துறையினர் வழங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட 43 பேரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே டெல்லியில் இருந்து வந்த 3 பேர் உள்பட மேலும் 5 பேரின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 74 பேர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×