search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை பட்டியல் - தமிழக அரசு வெளியீடு

    தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரசை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக கடைகள் உள்ளிட்டவைகளில் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழக மருத்துவமனையில் 22 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி உள்ளது. மேலும் ‘வெண்டிலேட்டர்’ உள்ளிட்ட உபகரணங்களும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் போதுமான நிலையில் வைத்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்க் கண்ட 18 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்களம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தின் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட மருத்துவமனைக்கு உடனே உரிய நெறிமுறைகளுடன் மாற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×