search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடமாற்றம்
    X
    இடமாற்றம்

    பெட்ரோல் நிரப்ப மறுத்த ஊழியரை தாக்கிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

    கோவை அருகே சூலூரில் பெட்ரோல் நிரப்ப மறுத்த ஊழியரை தாக்கிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
    சூலூர்:

    கோவை அருகே உள்ள சூலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் மாதப்பன். இவர் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் சூலூர் மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு தனது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார்.

    அப்போது அங்கு நெல்லையை சேர்ந்த அசோக்ராஜா(20) என்பவர் பணியில் இருந்தார். மாதப்பன் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புமாறு ஊழியர் அசோக்ராஜாவிடம் கூறினார். அதற்கு ஊழியர் 2 மணி வரை தான் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்படும். தற்போது நீங்கள் 3 மணிக்கு மேல் வந்துள்ளதால் பெட்ரோல் நிரப்ப முடியாது என்று கூறினார். இதையடுத்து மாதப்பன் அங்கிருந்து சென்றார்.

    பின்னர் மாலையில் மீண்டும் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அசோக்ராஜா ஒரு காருக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தார்.

    இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஏட்டு மாதப்பன் விரைந்து அங்கு சென்று அந்த ஊழியரிடம் சென்று நான் கேட்டபோது 3 மணிக்கு மேல் பெட்ரோல் நிரப்ப முடியாது என்றாய்? தற்போது யாரை கேட்டு காருக்கு பெட்ரோல் போடுகிறாய்? என அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மாதப்பன், ஊழியர் அசோக் ராஜாவை கடுமையாக தாக்கினார். மேலும் அவரை சூலூர் போலீஸ் அழைத்து சென்று 3 போலீசாருடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.

    பின்னர் அவரை அங்கிருந்து அனுப்பினர். இதில் அசோக்ராஜாவின் இடது கை முடிந்தது. இதுகுறித்து அசோக்ராஜா தனது உரிமையாளருக்கு போன் மூலம் தெரிவித்தார். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசோக்ராஜாவை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரித்த சூப்பிரண்டு சுஜித்குமார் ஏட்டு மாதப்பனை கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
    Next Story
    ×