search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட 9 பேரை படத்தில் காணலாம்.
    X
    மீட்கப்பட்ட 9 பேரை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணி: சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த 9 பேர் மீட்பு

    வேளாங்கண்ணியில் பணத்தை பறிகொடுத்துவிட்டு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த 9 பேர் மீட்கப்பட்டனர்.
    தஞ்சாவூர்:

    கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 21). இவருடைய மனைவி சத்யா (20). இவர்களுடைய குழந்தைக்கு காது குத்த இவர்கள் கடந்த மாதம் பொள்ளாச்சியில் இருந்து திருச்சிக்கு பஸ்சில் வந்தனர். இவர்களுடன் சத்யாவின் தாய்-தந்தை உள்பட 9 பேர் உடன் வந்தனர்.

    இவர்கள் அனைவரும் திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர். அங்கு குழந்தைக்கு காது குத்தும் வழிபாடு செய்த பின்னர் தேவாலயத்தில் உள்ள கலையரங்கத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

    அன்று ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. மறுநாள் சதீஷ் குடும்பத்தினர் கண்விழித்து பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் இருந்து ஒருவேன் மூலம் தஞ்சைக்கு வந்தனர். தஞ்சை புதிய பஸ்நிலையத்துக்கு வந்த இவர்கள், பஸ்கள் இயக்கப் படாததால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்துக்கு நடந்து வந்து அங்கு கடந்த 7 நாட்களாக தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் அங்கு பணிபுரியும் பெண் டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் 9 பேரையும் மீட்டு ஆட்டோ மூலம் வல்லத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர். அங்கு ஏற்கனவே வெளியூரை சேர்ந்த 19 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியை சேர்ந்த 9 பேரையும் சேர்த்து தற்போது 28 பேர் அங்கு போலீஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×