search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்க வேண்டும்- ப.சிதம்பரம்

    ஒளியேற்ற கூறும் பிரதமர் மோடி, பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    சென்னை:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

    ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் விளக்கை அணையுங்கள். மின் விளக்குகளை அணைத்துவிட்டு  அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி வீடுகளில் ஒளியேற்றவேண்டும். டார்ச், செல்போன் டார்ச் மூலமாகவும் ஒளியேற்றலாம். விளக்கேற்றும்போது அமைதியாக இருந்து நாட்டு மக்கள் குறித்து சிந்தியுங்கள். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரதமர் மோடியின் பேச்சு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி


    ஒளியேற்ற கூறும் பிரதமர் பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும்.

    ஒவ்வொரு உழைக்கும் ஆண் மற்றும் பெண், வணிக நபர் முதல் தினக்கூலி சம்பாதிப்பவர் வரை பொருளாதார சரிவை சந்தித்துள்ளனர். பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை நீங்கள் அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

    இவ்வாறு ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியுள்ளார்.
    Next Story
    ×