search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டு தீ
    X
    காட்டு தீ

    கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீயை கட்டுப்படுத்த‌ முடியாமல் வனத்துறை திணறல்

    கொடைக்கானல் வனப்பகுதியில் திடீரென காட்டு தீ பற்றி எரிந்தது. அங்குள்ள அரிய வகை மரங்கள், சோலை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாயின.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம்  நிலவுகிறது. இதனால் கொடைக்கானல் மலை பகுதிகளில் ஆங்காங்கே தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் வனசரகத்திற்கு உட்பட்ட பெருமாள்மலை வனப்பகுதியில் திடீரென்று பல ஏக்கர் பரப்பளவில் காட்டு தீ பற்றி எரிய தொடங்கியது, மளமளவென பற்றிய காட்டு தீ வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள்,சோலை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் தீயில் எரிந்து வருகிறது.

    மேலும் அப்பகுதியில் புகைமண்டலமாக மாறியுள்ளதால் வன விலங்குகள்,பறவை இனங்கள்  இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் வனத்துறைக்கு உட்பட்ட சுற்றுலா தலங்களில் சுமார் 50 க்கும்  மேற்பட்டோர் வனப்பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் கொளுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் மிக குறைந்த பணியாளர்கள் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே காட்டு தீ பற்றி எரியும் பகுதியை மாவட்ட வன அலுவலர் பார்வையிட்டார். மேலும் கடுமையான காற்று வீசிவருவதால்  வன பகுதியை ஒட்டியுள்ள வருவாய் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் காட்டு தீ பரவும் அபாயம் உள்ளது. இதனால் அதிகமான பணியாளர்களை கொண்டு தீயை அணைக்க வேண்டும் என அப்பகுதி விவசாய மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×