search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு தேர்வுகள் இயக்ககம்
    X
    அரசு தேர்வுகள் இயக்ககம்

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24ம் தேதி நிறைவடைந்தது. தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. மத்திய மாநில அரசுகள் சார்பில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. 

    இதற்கிடையே, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 7-ந்தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

    ஆனால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஏப்ரல் 7-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. எனவே விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
    Next Story
    ×