search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வெள்ளி, ஞாயிறு மூடப்படும்

    சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வருவதால் நெருக்கடியை தவிர்ப்பதற்காக நாளையும் (வெள்ளி), ஞாயிற்றுக்கிழமையும் மீன் மார்க்கெட் இயங்காது.

    சென்னை:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் இடநெருக்கடி காரணமாக மேதினப்பூங்கா அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    அங்கு கழிவுநீர் செல்வதற்கு வசதிகள் செய்யாமல் இருந்ததால் அங்கு சுகாதாரம் பேணப்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தக்க அறிவுரைகளை வழங்கினார்கள். சில கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.

    இந்த நிலையில் சிந்தா திரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வருவதால் நெருக்கடியை தவிர்ப்பதற்காக நாளையும் (வெள்ளி), ஞாயிற்றுக்கிழமையும் மீன் மார்க்கெட் இயங்காது. சனிக்கிழமை காலை 3 மணி முதல் 6 மணி வரை மார்க்கெட் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் மீனவர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதை அரசு இரட்டிப்பாக்கி தர வேண்டும் என்றும், ஆகஸ்டு மாதம் முதல் மீன் பிடி தடை காலத்தை அமல்படுத்தலாம் என்றும், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் தற்போது போதிய அளவு மீன்கள் இல்லாததால் ஆந்திராவில் இருந்து மீன், இறால் வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×