search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை பூ
    X
    மல்லிகை பூ

    கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: மதுரையில் ரூ.6 கோடி மல்லிகை விற்பனை பாதிப்பு

    கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் ரூ.1 கோடி வரை மல்லிகை விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.
    மதுரை:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு உளளது. இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க் கெட் மூடப்பட்டு 7 நாட் கள் ஆகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை பூ பயிரிடப்பட்டுள்ள விவ சாயிகளின் நிலை கவலைக் குரியதாக உள்ளது. மதுரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற மல்லிகை பூக்கள் பறிக்கப்பட்டாலும், பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் டன் கணக்கில் குப்பைக்கு சென்றன.

    இதனால் மல்லிகை பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல கனகாம்பரம், அரளி, பிச்சி உள்ளிட்ட பூக்களை சாகுபடிசெய்யும் விவசாயிகளின் நிலையும் மோசமாகி உள்ளது.

    இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், செல்லம்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மூலம் மாட்டுத்தாவணி பூ மார்க் கெட்டுக்கு தினமும் 20 டன் மல்லிகை வரத்து இருக்கும். சில மாதங்களாக மழை, பனி காலங்களை கடந்து பூ சாகுபடி விவசாயிகள் தற்போதுதான் அதிகமாக மலர் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு காரணமாக பூ மார்க்கெட்டுகள் இயங்காமல் உள்ளன.

    கடந்த 7 நாட்களில் ரூ.1 கோடி மதிப்பிலான பூக்கள் குப்பைக்கு சென்று விட்டன. இதேபோல் மதுரையில் இருந்து கனடா, ஸ்பெயின், லண்டன், சிகப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி இருக்கும் பூக்களை கணக்கிட்டால் ரூ. 6 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும்.

    எனவே கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவித் தொகை அளிப்பது போல பூ வியாபாரிகளுக்கும் அளித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×