search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்கெட் (கோப்புப்படம்)
    X
    மார்க்கெட் (கோப்புப்படம்)

    கூட்ட நெரிசல் இருப்பதால் 50 மார்க்கெட்டுகள் விளையாட்டு மைதானத்திற்கு மாற்றம்

    கூட்ட நெரிசல் இருப்பதால் 50க்கும் மேற்பட்ட மார்க்கெட்டுகளை இடமாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அருகே உள்ள விளையாட்டு மைதானங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை 2வது இடத்தில் உள்ளது. இங்கு 22 பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 4500 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் இடநெருக்கடி காரணமாக கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே பாதிப்புக்குள்ளான சென்னையில் இதன் மூலம் மேலும் வைரஸ் தொட்டு அதிகமாக பரவலாம்.

    இதனால் 50க்கும் மேற்பட்ட மார்க் கட்டுகளை இடமாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அருகே உள்ள விளையாட்டு மைதானங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.

    சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் முதலில் அருகே உள்ள மேதின பூங்காவுக்கு மாற்றப்பட்டது. இந்த மார்க்கெட்டில் 90 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இதைத்தொடர்ந்து சில நாட்களில் 50 க்கும் மேற்பட்ட மார்க்கெட்டுகள் அருகே உள்ள விளையாட்டு திடலுக்கு மாற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். விளையாட்டு மைதானங்களில் இடைவெளி விட்டு நிற்க முடியும் என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மண்ணடியில் இருக்கும் அண்ணா பிள்ளை தெரு மற்றும் மலையப் பெருமாள் தெருவில் உள்ள மார்க்கெட் சவுகார்பேட்டையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மைதானத்துக்கு மாற்றப்படும்.

    பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மார்க்கெட் ராபின்சன் மைதானத்திற்கு மாற்றப்படுகிறது.

    மார்க்கெட்டுகள் தினசரி காலை 6 மணி முதல் பிற்பகல் 2 .30 மணி வரையே இயங்க அனுமதிக்கப்படுகிறது.
    Next Story
    ×