search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா ரத்த பரிசோதனை
    X
    கொரோனா ரத்த பரிசோதனை

    கும்பகோணத்தில் கொரோனா பாதித்த வாலிபர் குடும்பத்தில் 6 பேருக்கு ரத்த பரிசோதனை

    கொரோனா பாதித்த வாலிபர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரி ஆய்வுக்காக எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாதப்பா தெருவில் வசிக்கும் வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 28-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாதப்பா தெருவுக்கு சுகாதாரதுறை சீல் வைத்தது.

    இந்நிலையில் வாலிபரின் தாய், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் மனைவியின் அண்ணன், தங்கை ஆகிய 6 பேருக்கு தொடர்ந்து காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரி ஆய்வுக்காக எடுக்கப்பட்டு திருவாரூர் கொரோனா வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 நர்ஸ்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் அரிசி கடை வைத்துள்ள ஒருவர் ஒருவாரம் முன்பு டில்லியில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரும், அவருடன் பழகிய அவரது குடும்பத்தினர் 12 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஏப்ரல் 20-ம்தேதி வரை கண்காணிக்கப்படுவதாக நகர்நல அலுவலர் பிரேமா தெரிவித்தார்.

    Next Story
    ×