search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுத்தீ
    X
    காட்டுத்தீ

    துடியலூர் அருகே வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ

    துடியலூர் அருகே வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் அங்குள்ள செடிகள், புதர்கள், காய்ந்த மரங்கள் எரிந்து நாசமாகியது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அருகே ஆனைக்கட்டி மலைப்பகுதி உள்ளது. இங்கு பல்வேறு வகையான அரிய மரங்கள், மூலிகை செடிகள் உள்ளன. மேலும் காட்டெருமை, காட்டு யானைகள், மான்கள், கரடிகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் நிரப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆனைக்கட்டியில் உள்ள மாங்கரை வனப் பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் அந்த பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவ தொடங்கியது. இந்த காட்டுத்தீயில் அங்குள்ள செடிகள், புதர்கள், காய்ந்த மரங்கள் எரிந்து நாசமாகியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்டம் குந்தா அருகே உள்ள கொடலட்டி பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயில் அருகில் உள்ள தேயிலை தோட்டம், வனப்பகுதியும் பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    Next Story
    ×