search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளத்தில் வலைளை விரித்து மீன் பிடிக்கும் காட்சி.
    X
    குளத்தில் வலைளை விரித்து மீன் பிடிக்கும் காட்சி.

    பாபநாசம் பகுதியில் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பாபநாசம் பகுதியில் குளத்தில் பிடிக்கப்பட்ட உயிர் மீன்களை பொதுமக்கள் வாங்க சென்றனர்.

    பாபநாசம்:

    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வந்து செல்கிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுவாக மக்கள் இறைச்சி வகைகளை வாங்கி சமைப்பது வழக்கம். 

    கடந்த சில நாட்களாகவே ஆட்டு இறைச்சி மற்றும் மீன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கோழி இறைச்சியைத் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தடை உத்தரவால் முடங்கி கிடக்கும் மக்கள் நேற்று காலையிலேயே இறைச்சி கடைகளில் குவிய தொடங்கினர். பாபநாசத்தில் உள்ள ஆட்டு இறைச்சி கடைகளிலும், மீன் விற்பனை கடைகளிலும் மக்கள் குவிந்தனர்.

    ஒவ்வொரு கடைகளின் முன்பும் நீண்ட வரிசை காணப்பட்டது. சமூக இடைவெளிவிட்டு முக கவசம் அணிந்து இறைச்சி மீன்களை வாங்கிச் சென்றனர். ஆட்டிறைச்சியின் விலை கூடுதலாக இருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டினர் மேலும் பாபநாசம் குளம், கோபுராஜபுரம் குளம், அன்னுகுடிகுளம், வேப்பங்குளம், அய்யனார் கோவில் குளம், ஆகிய குளங்களில் நேற்று உயிர் கெண்டை மீன்களை பிடித்தனர். மேலும் அந்த மீன் வலையில் கட்லா மீன், சிலேபி மீன், விரால் மீன், இரால் ஆகியவைசிக்கியது அனைத்து உயிர் மீன்களையும் திரளாக மக்கள் குளத்திற்கே வந்து வாங்கி சென்றனர். உயிர் கெண்டை மீன்கள் ரூ.200க்கு விற்பனையானது.

    Next Story
    ×