search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சம் பழம் டீ
    X
    தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சம் பழம் டீ

    அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகள் பட்டியல்

    கொரோனா நோய்க்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு என்னென்ன உணவு வகைகள் வழங்கப்படுகின்றன என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா நோய்க்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு என்னென்ன உணவு வகைகள் வழங்கப்படுகின்றன என்ற விவரம் வருமாறு:-

    அதிகாலையில் தோலுடன் கூடிய இஞ்சியை எலுமிச்சம் பழத்தோடு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதன் சாறை சூடாக கொடுக்கப்படுகிறது.

    காலை 8 மணி:- இரண்டு இட்லி, சாம்பார், உப்புமா, இரண்டு முட்டை, தக்காளி சட்டினி, பால் கொடுக்கப்படுகிறது.

    இட்லி, சாம்பார்

    10 மணி:- சாத்துக்குடி பழச்சாறு.

    11 மணி:- தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சம் பழம், கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து சூடாக கொடுக்கப்படுகிறது.

    சப்பாத்தி, புதினா சாதம், கீரை, இரண்டு வகை பொறியல், முட்டை, மிளகு ரசம், உடைத்த பொட்டுக்கடலை வழங்கப்படுகிறது.

    மதியம் 3 மணி:- கொதிக்க வைத்த நீர், மஞ்சள் மிளகு உப்பு கலந்து கொடுக்கப்படுகிறது.

    மாலை 5 மணி:- பருப்பு சூப், வேக வைத்த சுண்டல்.

    இரவு 7 மணி:- சப்பாத்தி, இட்லி அல்லது ரவா கிச்சடி, சேமியா உப்புமா, காய்கறி குருமா, தக்காளி சட்டினி.

    இரவு 9 மணி:- தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சை பழத்தை கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கப்படுகிறது.

    இரவு 11 மணி:- மஞ்சள், மிளகு, உப்பு கலந்த நீர் கொடுக்கப்படுகிறது.

    ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை படி இந்த உணவு வகைகள் வழங்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×