search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு
    X
    தமிழ்நாடு அரசு

    கொரோனா தடுப்பு பணிக்கு நிதி வழங்குங்கள்- பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

    கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்யும்படி பொதுமக்களை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. 

    இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

    முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி-யின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு.

    நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு மூலமாக வழங்கலாம். சென்னை தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செலுத்தலாம். வங்கி கணக்கு எண்: 117201000000070, IFSC: IOBA0001172.

    வெளிநாடு வாழ் மக்கள்,  IOBAINBB001, Indian Overseas Bank, Central Office, Chennai என்ற Swift Code-ஐ பின்பற்றி நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:

    அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,
    முதலமைச்சர் பொது நிவாரண நிதி,
    நிதித்துறை, தமிழ்நாடு அரசு,
    தலைமைச் செயலகம்,
    சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.

    தற்போதைய நிலையில் முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடையை நேரடியாக வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. எனினும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி தருவோரின் விவரங்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×