search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

    கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபான்கடைகள் மூடப்பட்டு உள்ளன.

    மதுபானங்கள் கொள்ளை போவதை தடுக்கும் வகையில், கடைகளில் உள்ள மதுபாட்டில்களை உடனடியாக டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு அதன் மேலாண்மை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி முனுசாமி நகாஜீல் மாந்தோப்பில் உள்ள மதுக்கடையில் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. நேற்று நள்ளிரவு அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது மதுக்கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளை போய் இருப்பதை கண்டனர்.

    இது குறித்து கடையின் மேலாளரான ராக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த துளசிராமனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மதுக்கடையில் இருந்த ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம கும்பல் அள்ளி சென்று இருப்பது தெரிந்தது.

    மேலும் கடையின் வெளிபுறம் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கி வீசி விட்டு இந்த துணிகர திருட்டை மர்ம ஆசாமிகள் அரங்கேற்றி உள்ளனர்.

    கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மதுபானக்கடைகள் மூடப்பட்ட நிலையில், மது பிரியர்கள் பொறுமையை இழந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×