search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக தலைமை அலுவலகம்
    X
    அதிமுக தலைமை அலுவலகம்

    கொரோனா வைரஸ் பாதிப்பு - அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் நிதியுதவி அறிவிப்பு

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அ.தி.மு.க. எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நிதியுதவி வழங்குகின்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களுக்கு முககவசம், சானிடைசர்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அ.தி.மு.க. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி வழங்குகின்றனர்.

    இதன்படி, எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியும், எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என அ.இ.அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×