search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் எதிரொலி- பெரம்பலூர் மாவட்டத்தில் 564 பேர் தொடர் கண்காணிப்பு

    கொரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த 564 பேர் சுகாதாரத் துறையின் மூலம் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    கடந்த மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஏற்கனவே 166 பேர் வந்துள்ளனர். மேலும் புதிதாக தற்போது வெளிநாட்டிலிருந்து 210 பேரும், வெளி மாநிலத்திலிருந்து 168 பேரும் என மொத்தம் 564 பேர் வந்துள்ளனர். இவர்கள் அவர்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு  வருகிறது.

    வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என அடையாளப்படுத் துவற்காக அவர்களது கையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது இல்லங்களில் தனிமைப்ப டுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் சுகாதாரத்துறை யின் மூலமாக ஒட்டப்பட்டுள்ளது.

    இவர்கள் வீட்டினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதில் குறிப்பாக வெளிநாட்டிலிருந்து குன்னம் தாலுகா, லெப்பைக்குடி காட்டிற்குதான் அதிகளவி லானோர் வந்துள்ளனர். இதேபோல் வெளிமாநிலத்திலிருந்து ஆலத்தூர் தாலுகா, மலையப்பா நகர், வேப்பந்தட்டை தாலுகா 26.எறைïர், மலையாளப்பட்டி ஆகிய ஊர்களுக்கு அதிகளவிலானோர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு சளி, இருமல்  இருந்துள்ளதோடு, அதிகளவில் மூச்சுதிணறல் ஏற்பட்டு வந்ததால் கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாமா? என பரிசோதனை செய்வதற்காக திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தில் வெளி நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு அடையாளமாக கையில் சீல் வைக்கும் சுகாதாரத்துறையினர்.
    Next Story
    ×