search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயிரம் ரூபாய்
    X
    ஆயிரம் ரூபாய்

    ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு அரசின் நிவாரண உதவி கிடைக்கும்

    தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கான நிவாரண உதவிகள் ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். அரிசி ரே‌ஷன் அட்டைத்தாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    தமிழக அரசின் நிவாரண உதவிகள் ஒவ்வொரு தெரு மக்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1000 ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் எப்போதும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது.

    ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த நிவாரண உதவிகள் வழங்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது நிவாரண உதவிகள் இலவச அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை விநியோகம் செய்யும் சூழ்நிலை இல்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது நாடு முழுவதும் கொரோனாவை விரட்டுவதற்காக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மக்களை அதிகம் ஒரே இடத்தில் திரள செய்யும் வகையில் பணிகளை செய்ய இயலாது.

    இதன் காரணமாக ஏப்ரல் 15-ந்தேதி வரை தமிழக அரசின் நிவாரண உதவிகளை செய்ய இயலாது என்று தெரியவந்துள்ளது. அரிசி ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு வேறு வகையில் விநியோகம் செய்யவும் வாய்ப்பு இல்லை. அதாவது ரே‌ஷன் கார்டுகள் இன்னமும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படவில்லை. எனவே ஏப்ரல் 2-வது வாரத்துக்கு பிறகுதான் தமிழக அரசின் நிவாரண உதவிகளை பெற முடியும்.
    Next Story
    ×